கூடலூர் சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.......
கேரளா மாநிலத்தில் நிஃபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கேரள மாநில எல்லையை ஒட்டி உள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்....... கேரளா மாநிலம் மலப்புரம் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிஃபா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க பணிகளில் அம்மாநிலம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதிகளில் அமைந்துள்ள தாளூர், கீழ் நாடுகாணி, கக்கநள்ளா, பட்டவயல், கெத்தை உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளா மாநிலத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பயணிகளை வெப்பக்கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு நீலகிரி மாவட்டத்திற்குள் சுகாதாரத்துறையினர் அனுமதித்து வருகின்றனர். பரிசோதனையில் பயணிகளுக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணித்து மாவட்டத்திற்குள் அனுமதிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வௌவால்கள் கடித்த பழத்தால் நிஃபா வைரஸ் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் பழங்கள் இருக்கிறதா என்றும் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டும் சோதனை செய்தப்பின் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
Next Story



