பேரூராட்சி முன்பு ஆர்ப்பாட்டம்

X
கூடலூர் அருகே புளியம்பாறை நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கியா பின்னும் வனத்துறையினர் காங்கிரீட் பாலம் அமைய உள்ள இடத்தில் 4 அகலத்திற்கு இரும்பு நடைப்பாதை பாலம் அமைப்பதற்கான பணியை துவங்கி உள்ளதால் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியினர் மார்க்சிஸ்ட் நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் முன்பு வாயில் கருப்பு ரிப்பன் அணிந்து நூதன முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....... நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை கிராமத்தில் பழங்குடியினர் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து ஆமைக்குளம் அரசு கல்லூரிக்கு மற்றும் அத்தியாவசிய அவசர தேவைகளுக்கு செல்லக்கூடிய பாதையில் அமைந்துள்ள நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டுமென இப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் நிதியின் கீழ் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி கான்கிரீட் பாலம் அமைக்க உத்திரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி வந்துள்ளனர். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காவல் துறையினரை குவித்து வனத்துறையினர் சுமார் 4 அடி அளவில் இரும்பு நடைப்பாதை பாலம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கிய 30 லட்சம் ரூபாய் நிதிக்கு உண்டான கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் வனத்துறை மற்றும் நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு வாயில் கருப்பு ரிப்பன் அணிந்து நூதன முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறை அமைக்கும் இப்பாலத்தால் அவசரத் தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிதியின் கீழ் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story

