ரேஷன் பொருள்களை கடத்திய ரேஷன் கடைக்காரரை தேடுகிறது போலீஸ்

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட அய்யனார் குளம் ஏ ஆண்டிப்பட்டி உள்பட 3 ரேஷன் கடைகளுக்கு பொறுப்பாளராக இருந்த கிருஷ்ணன். என்பவர் ரேஷன் கடைகளில் உள்ள 6 டன் ரேஷன் அரிசி(6046), 327 கிலோ சீனி, 215 கிலோ துவரம்பருப்பு, 532 லிட்டர் பாமாயில், 270 கிலோ கோதுமை ஆகியவற்றை மொத்தமாக கடத்திச் சென்று விற்பனை செய்துள்ளார். இது குறித்து கடை ஊழியர்களுக்கு தெரிய வர பொது விநியோகத் திட்ட துணை பதிவாளரிடம் புகார் செய்தனர். பொதுவிநியோகத்துறையினர் விசாரணை நடத்தியதில் கடத்தப்பட்டது உண்மையான தெரிய வந்தது. இதையடுத்து மதுரை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தனர். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரேஷன் கடை ஊழியர் கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
Next Story

