கவிஞர் பாட்டாளி எழுதிய தீராக்களம் எனும் புதினத்தின் திறனாய்வுக் கூட்டம்
பெரம்பலூரில் கவிஞர் பாட்டாளி எழுதிய தீராக்களம் எனும் புதினத்தின் திறனாய்வுக் கூட்டம் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற செயலர் காப்பியன் தலைமையில் நடைப் பெற்றது. தோழர் ந. செல்லதுரை, புலவர் அரங்க நாடன், பாவலர் கோவிந்தன், செந்தமிழ் வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியை முனைவர் த. இரம்யா, பாவலர் அகவி, பாவலர் மூ.த. கவித்துவன் ஆகியோர் தீராக்களம் எனும் புதினம் குறித்து திறனாய்வு உரை நிகழ்த்தினர். முனைவர் க. தமிழ்மாறன், வாழையூர் குணா, அகரம் திரவியராசு ஆகியோர் பாட்டாளியைப் பாராட்டிப் பேசினர். பாவலர் தமிழோவியன் தமிழிசைப் பாடல்கள் பாடினார். த. க. இ. பெரு மன்ற தலைவர் பாவலர் பாளை செல்வம், ஆசிரியர் சிவானந்தம் ஆகியோர் வரவேற்புரையும் நன்றியுரையும் கூறினர். அடுத்த நிகழ்வில் பெரம்பலூரில் சிறுகதைப் பயிலரங்கு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story






