உதவியாளரின் திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வர்

X
Komarapalayam King 24x7 |13 July 2025 9:44 PM ISTகுமாரபாளையத்தில் நடந்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் திருமணத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்
குமாரபாளையத்தில் நடந்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் திருமணத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் உதயகுமார் மற்றும் ஜனனியின் திருமண வரவேற்பு விழா, குமாரபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், உள்பட பலர் பங்கேற்றனர். இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: புரட்சி தலைவரை, புரட்சி தலைவியை பார்க்க வருவது போல், அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடியார் சுற்றுப்பயணத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். இந்த சுற்றுப்பயணம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வரும் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதும், எடப்பாடி முதலமைச்சர் ஆவதும் நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார். ஒரு மரணத்திற்கு மன்னிப்பு கேட்ட தமிழக முதல்வர், இதற்கு முன்பு நடந்த மற்ற மரணங்களுக்கு மன்னிப்பு கேட்பாரா என விஜய் கேட்கிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன என நிருபர்கள் கேட்க, அவரவர் கட்சியை அவரவர் வளர்க்க பேசுவது வழக்கம் தானே, என்று கூறினார்.
Next Story
