திருமண்டல தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு!

X
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று 13 ந் தேதி வெளியிடப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் ரெத்தினராஜ் மற்றும் ஜாண் சந்தோஷம் ஆகியோர் அறிவித்துள்ளனர். சி.எஸ்.ஐ. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து திருமண்டல தேர்தலை நடத்தவும், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதி பதி ஜோதிமணி நியமிக்கப்பட்டு கடந்த ஜுன் மாதம் 26ம் தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். அதன்படி நேற்று ஜுலை 13 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வாக்காளர் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும் என தேர்தல் அட்டவணையில் அறிவிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 7ம் தேதி சினாடு நிர்வாகம் தூத்துக்குடி- நாசரேத் திரு மண்டலத்திற்கு பொறுப்பு பேராயராக கோவை திருமண்டல பேராயர் தீமோத்தேயு ரவீந்தரை நியமித்தது. அவர் பொறுப்பேற்றவுடன் தூத்துக்குடி திருமண்டல அலுவலகத்தில் வைத்து தேர்தலுக்கான வேறு தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என கூறினார்.இதனால் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடையே நேற்று முன் தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதி மணிதான் திருமண்டல தேர்தலை நடத்துவார். அவருக்கு போலீசார் பாதுகாப்பு வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. எனவே, திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்பதால் 13.7.2025 அன்று தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல அனைத்து ஆலயங்களிலும் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். இதனை மேற்கொள்ளாத சேகர தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்படுகிறது என திருமண்டல தேர்தல் அதிகாரி கள் ரெத்தினராஜ் மற்றும் ஜாண் சந்தோஷம் ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Next Story

