சணப்பிரட்டியில் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் விஷம் குடித்து தற்கொலை.
சணப்பிரட்டியில் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் விஷம் குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம், சணப்பிரட்டி, வடக்கு காந்திகிராமம் அன்பு நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சரவணமுத்து மகன் தங்க முனியப்பன் வயது 27. இவருக்கு கடந்த ஒரு மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்த்தி அடைந்த தங்க முனியப்பன் ஜூலை 7ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தங்க முனியப்பனின் தாயார் கலா வயது 54 அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை கொண்ட காவல் துறையினர் உயிரிழந்த தங்க முனியப்பனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்
Next Story





