‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்:
X
முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடக்கும் இடங்களில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி முகாம் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நோக்கமாகும். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நவம்பர் மாதம் 15-ந் தேதி வரை 432 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில், முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் நாளை முதல் அடுத்த மாதம் 14-ந் தேதி வரை 120 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. என கூறினார்.
Next Story