ஏற்காட்டில் விளையாட்டு மைதானம் திறப்பு

X
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இதுவரை இல்லாத வகையில் உள்ளுர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குதூகலமாக தங்களது பொழுதை கழிக்கும் வகையில், ‘டர்ப் 1515’ என்ற டர்ப் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது. முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி அக்பர் அலி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மைதான உரிமையாளர்கள் அருள் விக்னேஷ், செல்வகீதன், வக்கீல்கள் சி.எஸ்.பிள்ளை, ரமேஷ், அறிவுச்சந்திரன் மற்றும் ஐகோர்ட்டு வக்கீல்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் சேலம் ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டரி கூட்ட அரங்கு திறக்கப்பட்டது. அதனை கூடுதல் அட்வகேட் ஜெனரல் சந்திரமோகன், ரோட்டரி கவர்னர் செந்தில்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். சேலம் ரோட்டரி சங்க புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர்.
Next Story

