பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை முயற்சி

பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை முயற்சி
X
குஜிலியம்பாறை அருகே பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் வாலிபர் கைது
திண்டுக்கல், குஜிலியம்பாறையை அடுத்த பாளையம் மொடக்கு சாலையை சேர்ந்தவர் உமாநாத் மனைவி மலர்க்கொடி(40) இவரது வீடு அருகே குடியிருப்பவர் பாலகுரு(25) இருவரது குடும்பத்தினர் இடையே பாதை பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் மலர்க்கொடியின் வீட்டில் இரவில் புகுந்த பாலகுரு மலர்கொடியை கடுமையாக தாக்கி தோட்டத்து கிணற்றுக்குள் வீசி உள்ளார். நீச்சல் தெரிந்ததால் மலர்கொடி படி வழியாக தப்பித்து கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பாலகுருவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story