போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பேரணி
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.கல்லுாரி முதல்வர் லலிதா தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். கல்லுாரி மாணவர்கள் 100 பேர் சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள் ஏந்தியபடி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
Next Story