கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு – குவிந்த சுற்றுலா பயணிகள் !

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
கடந்த மே 23ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூடி, சுற்றுச்சூழல் அழகை ரசிக்க வந்தனர். வனத் துறையின் அனுமதியுடன், நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்கி, சில கிலோ மீட்டர் நடைபயணம் செய்தபின், அருவியில் குளித்து மகிழ்ந்தனர். நீண்ட நாட்கள் அடைப்பு மற்றும் விடுமுறை நாள் என்பதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story