கரூரில் சட்ட மேதை அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும். விசிக மனு.
கரூரில் சட்ட மேதை அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும். விசிக மனு. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த கரூர் மாவட்டம் கடந்த 1995 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. 30 வருடங்களாகியும் பலமுறை சட்டமேதை அம்பேத்கர் சிலை அமைக்க மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் கட்சியினர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரை சந்தித்து அண்ணல் சட்டமேதை அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும்என மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவித்த சக்திவேல், கரூரில் பழைய பேருந்து நிலையம் , புதிய பேருந்து நிலையம் , லைட் ஹவுஸ் , ஆட்சியர் அலுவலகம் மற்றும் குளித்தலை நீதிமன்ற வளாகம் போன்ற நான்கு ஐந்து இடங்களை குறிப்பிட்டு மனு அளித்துள்ளோம். இதில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.
Next Story





