ராஜபாளையம் அருள்மிகு பிரசித்தி பெற்ற திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!*

ராஜபாளையம் அருள்மிகு பிரசித்தி பெற்ற திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!*
X
ராஜபாளையம் அருள்மிகு பிரசித்தி பெற்ற திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருள்மிகு பிரசித்தி பெற்ற திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு திருச்சிற்றம்பல குருநாத ஸ்வாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவில் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 3,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவில் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி திருக்கோவில். இக்கோவில் ஆனது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சொக்கலிங்க சித்தர் என்பவரது கனவில் தோன்றிய சிவபெருமான் கோவில் எழுப்பி வழிபாடு செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதன்படி சொக்கலிங்க சித்தர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து நாள்தோறும் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அப்போதைய காலம் முதல் தற்போதைய காலம் வரை கோவிலுக்கு வரும் பக்தர்களின் குழந்தை வரம் வியாபார விருத்தி உடல் நிலை ஆரோக்கியம் போன்ற பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டு வருவதால் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த நிலையில் இது கோவிலின் உணரவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் கடந்த 11ஆம் தேதி காப்பு கட்டி தொடங்கியது. மகா கணபதி பூஜை மகாலட்சுமி ஹோமம் சுதர்சன ஹோமம் விக்னேஸ்வர பூஜை வேதபாராயணம்,காலயாக சாலை பூஜைகள், என தொடர்ந்து பல்வேறு பூஜைகள் தினந்தோறும் நடைபெற்று வந்த நிலையில் . இன்று நான்காம் காலையாக சாலை பூஜைகள் வேத பாராயணம் ஓதப்பட்டு யாத்திரை தானே சங்கல்பம் கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலில் அருள் பாலித்து வரும் குருநாத சுவாமிக்கும் கன்னி விநாயகர் அணுக்கை மகா கணபதி ஸ்ரீ வள்ளி விநாயகர் இரட்டை விநாயகர் மஹாசாஸ்தா ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயண சுவாமிஉட்பட புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கருடாழ்வார் ஜெயவீரர் ஆஞ்சநேயர் நந்தி பலிபீடம் ஆகியவற்றின் கோபுரங்களுக்கு பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இக்கும்பாபிஷேக விழாவில் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 3,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிவ நாம கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த சுமார் 5000 மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
Next Story