கொடியாலத்தூர் காளியம்மன் கோவில் எதிரே உள்ள
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த கொடியாலத்தூர் காளியம்மன் கோவில் பகுதியில், சுமார் 150- க்கும மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, காளியம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள பெரியகுளத்தை இங்கு உள்ள மக்கள் குளிக்கவும், துவைக்கவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குளத்தில், ஆகாய தாமரை செடிகள் படர்ந்து அழுகிய நிலையில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் மேலும், அருகில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருவதாலும், குளத்திலுள்ள நீர் வாய்க்காலில் கலப்பதாலும், பள்ளி குழந்தைகள் இந்த நீரை பயன்படுத்துவதாலும் தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, அரசு அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி, குளத்தை தூர்வாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story





