கரூர்-மனநலம் பாதித்த மகளுடன் கண்ணீ ரோடு வீட்டுமனை கேட்டு மனு அளித்த பெண்.
கரூர்-மனநலம் பாதித்த மகளுடன் கண்ணீ ரோடு வீட்டுமனை கேட்டு மனு அளித்த பெண். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. கணவனால் கைவிடப்பட்டவர். இவருக்கு வயதுக்கு வந்த மனநலம் பாதித்த மகள் உள்ளார்.மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் ஆயாவாக குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 15 வருடங்களாக வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்தும் தனக்கு இதுவரை வீட்டுமனை வழங்கவில்லை எனவும் , தற்போது தனது மகள் பருவத்திற்கு வந்து விட்டதால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் தனக்கு வீட்டு மனை அல்லது வீடு ஒதுக்கி தர வேண்டும் என கண்ணீரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்து பேட்டி அளித்தார்.
Next Story




