ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பெண்கள் கோரிக்கை!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை உடனடியாக திறக்க தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள மடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அதை நம்பி தொழில் செய்து வந்த தொழில் முனைவோர் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் ஆகியோர் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர் மேலும் தாமிர உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது இரண்டு விஞ்ஞானிகள் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையை தற்போது காற்று நீர் நிலம் என சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் நவீன முறையில் பசுமையான முறையில் திறக்க தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்த மடத்தூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலை அருகே அமைந்துள்ள தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்து வந்தனர் தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தாங்கள் வாழ்வாதாரம்இழந்து மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம் மேலும் 2023 ஆம் ஆண்டு மழை வெள்ள காலங்களில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன இவ்வாறு தொடர்ந்து கிராம மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன எனவே மீண்டும் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை பசுமை முறையில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மடத்தூர் பகுதி கிராம பெண்கள் கோரிக்கை விடுத்தனர்
Next Story