தென்காசியில் சுற்றுலா பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்

தென்காசியில் சுற்றுலா பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்
X
சுற்றுலா பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா செயலாளர் சங்கர நாராயணன் தலைமை தாங்கினார். குற்றாலம் ஐ.ஓ.பி வங்கியின் மேலாளர் உமாதேவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குற்றாலம் வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 300க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story