இயக்குனர் மிஷ்கினின் பெருந்தன்மை திரையில் தெரியும் – ஓஹோ எந்தன் பேபி படக்குழு தகவல்

இயக்குனர் மிஷ்கினின் பெருந்தன்மை திரையில் தெரியும் – ஓஹோ எந்தன் பேபி படக்குழு தகவல்
X
கோவை, அவினாசி சாலையில் உள்ள பிராட்வே சினிமாஸில் ஓஹோ எந்தன் பேபி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
கோவை, அவினாசி சாலையில் உள்ள பிராட்வே சினிமாஸில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஓஹோ எந்தன் பேபி படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. இந்த படம், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. படம் பற்றி பேசிய இயக்குனர் கிருஷ்ணகுமார், த்ரில்லர், ஆக்ஷன், வயலன்ஸ் படங்களுக்கு மத்தியில் ஒரு ஜாலியான படம் தேவைப்படுகிற நேரத்தில் இது உருவானது. இது நண்பர்கள் கூட்டத்திற்கான முழுக்க முழுக்க ஜாலியான படம் என தெரிவித்தார். மேலும், இயக்குனர் மிஷ்கின் குறித்தும் பேசிய அவர், அவரது பெருந்தன்மை திரையில் தெளிவாக தெரியும் என்று புகழாரம் சூட்டினார். பட்ஜெட்டே ஹிட்டை தீர்மானிக்காது, ரசிகர்கள் படம் கனெக்ட் ஆகினால் அது ஓடி விடும் என்றும் கூறினார். நாயகனாக நடித்துள்ள விஷ்ணு விஷாலின் தம்பி யு.ருத்ரா, படத்திற்கு முன்பே இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் தர்பார் படத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதாகவும், ஆனாலும் கேமரா முன் நடிக்கும் போது சிறிய பயம் இருந்ததாகவும் கூறினார். தனது அண்ணனின் ஆலோசனைகளை பின்பற்றி நடித்த அனுபவத்தை அவர் பகிர்ந்தார்.
Next Story