நிபா வைரஸ் பரவல்: தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு !

நிபா வைரஸ் பரவல்: தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு !
X
கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் வேகமாக பரவி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் வேகமாக பரவி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில், குறிப்பாக கோவை மாவட்டத்தின் காரமடை அருகேயுள்ள கோபனாரி, முள்ளி, மேல் பாவி பகுதிகளில் சுகாதாரத்துறை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவிலிருந்து வரும் மற்றும் கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்காக நிறுத்தப்பட்டு, பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது. அவசியமானவர்களுக்கு நிபா வைரஸ் குறித்த ஆலோசனையும் வழங்கப்படுகின்றது.
Next Story