மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராடியவர்களை அழைத்த காவல் ஆய்வாளரை பார்த்து தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் தன்னை தொட வேண்டாம் என வாக்குவாதம் செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராடியவர்களை அழைத்த காவல் ஆய்வாளரை பார்த்து தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் தன்னை தொட வேண்டாம் என வாக்குவாதம் செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது
X
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராடியவர்களை அழைத்த காவல் ஆய்வாளரை பார்த்து தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் தன்னை தொட வேண்டாம் என வாக்குவாதம் செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது...
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராடியவர்களை அழைத்த காவல் ஆய்வாளரை பார்த்து தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் தன்னை தொட வேண்டாம் என வாக்குவாதம் செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது... விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தின் கீழ் 600 பல்நோக்கு பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஏற்கனவே பணி மேற்கொண்டு வந்த ஒப்பந்த நிறுவனத்திலிருந்து வேறொரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது புதிதாக ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சுமார் 150 பல்நோக்கு பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. பின்னழகில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மேற்பட்டோர் இன்று மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு தரையில் அமர்ந்திருந்த தமிழ்நாடு துப்புரவு தொழிலாளர் சங்க தலைவர் மாரியப்பன் என்பவரை காவல் ஆய்வாளர் கையைப் பிடித்து எழும்புமாறு அழைத்துள்ளனர். அப்போது தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் எனவும் தன்னை நீங்கள் தொடக்கூடாது எனவும் மாரியப்பன் தெரிவித்ததால் தான் பொதுமக்களுக்கு சேவையாற்ற வந்த காவல் துறை அதிகாரி தமக்குள் எந்த ஜாதி வேறுபாடும் கிடையாது என கூறிய காவல் ஆய்வாளர் ஜாதி ரீதியாக போராட்டத்தை திசை திருப்ப வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்ட மாரியப்பன் என்பவரிடம் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story