தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது
X
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ 1.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை, பான்மசாலா பொருட்கள் மற்றும் ரூ. 36 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மற்றும் சோதனை மேற்கொண்டனர். சாலையில் உள்ள தனியார் திரையரங்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு பைகளுடன் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கரிவலம் வந்த கல்லூரை சேர்ந்த இசக்கி முத்து (36) என்பதும், புகையிலை பான் மசாலா பொருட்களை வாடகைக்கு வீடு எடுத்து மொத்தமாக பதுக்கி வைத்து சில்லறை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 30 கிலோ எடை கொண்ட கணேஷ் புகையிலை மற்றும் புல்லட் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். இசக்கிமுத்து மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
Next Story