பட்டப்பகலில் இளைஞர் மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டி படுகொலை*

பட்டப்பகலில் இளைஞர்  மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டி படுகொலை*
X
பட்டப்பகலில் இளைஞர் மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டி படுகொலை*
விருதுநகரில் பட்டப்பகலில் இளைஞர் மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டி படுகொலை விருதுநகர் அல்லம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சார்ந்தவர் மாரிமுத்து (28) இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் தனியாக வசித்து வருகிறார். மேலும் மினரல் வாட்டர் வேன் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் இன்று மதியம் வீட்டிற்குள் உணவு உணவு அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து உணவு அருந்தி கொண்டிருந்த மாரிமுத்துவை கத்தியால் கழுத்தில் குத்தி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் இருந்த மாரிமுத்துவை கண்ட அக்கம் பக்கத்தினர் கிழக்கு காவல் நிலைய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரிமுத்துவை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரிமுத்து உயிர் இறந்ததை உறுதிப்படுத்தினர் இந்த சம்பவம் குறித்து மோப்பநாய் உதவியுடன் அங்கிருந்த தடயங்களை சேகரித்த கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் இந்த படுகொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story