பிரபல பல் மருத்துவமனை அருகே ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது...*

பிரபல பல் மருத்துவமனை அருகே ஏற்பட்ட  தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது...*
X
பிரபல பல் மருத்துவமனை அருகே ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது...*
விருதுநகரில் பிரபல பல் மருத்துவமனை அருகே ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது... விருதுநகர் தந்திமர தெரு பகுதியில் மீனாம்பிகை பங்களா பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான கறிக்கடை இயங்கி வருகிறது. தகர செட் அமைத்து கறிக்கடை நடத்தி வரும் நிலையில் கறிக்கடைக்கு அருகே கொட்டப்பட்டிருந்த குப்பையில் சிலர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. குப்பையில் பற்றிய தீ அருகில் இருந்த கறிக்கடையில் பரவி எரிந்தது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதி திடீரென புகை மண்டலமாக மாறியது. உடனடியாக பல் மருத்துவமனையின் ஜன்னல் கதவுகளை மூடியதால் புகை பாதிப்பில் இருந்து நோயாளிகள் பாதுகாக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு அருகே ஏற்பட்ட தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story