உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள வணிகர்கள் விண்ணப்பிக்கலாம்

X
செ.வெ.எண்:621 நாள்:14.07.2025 விருதுநகர் மாவட்டம் ------ தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல் இருக்கும் பெரிய வகை உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 இலட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது. அதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். “உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழுவின் முதலாம் காலாண்டிற்கானக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அன்று (11.07.2025) மாலை மாவட்ட ஆட்சியரகத்தின் சிறுகூட்டரங்கில் நடைபெற்றது. உணவு பாதுகாப்புத் துறையின் செயல்திறனைக் கூராய்வு செய்த பின்னர் உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளை உணவு வணிகர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கி உணவு பாதுகாப்புத் துறையின் அலுவலர்கள் அமுல்படுத்த வேண்டும் எனவும், உணவு வணிகர்களும் அச்சட்டத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Next Story

