தாளவாடி விலை நிலங்களுக்குள் புகுந்து வாழை பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை
தாளவாடியில் விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்களை யானைகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் பீதியில் உள்ளனர். சத்தி அடுத்த தாளவாடி மலைப்பகுதி ஜோரேகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராசுக்குட்டி விவசாயி, இவரது விவசாய நிலத்தில் வாழை, பாக்கு, தென்னை மரங்கள் பயிரிட்டு பாதுகாப்பிற்காக விளை நிலங்களை சுற்றிலும் கம்பி வேலிஅமைத்துள்ளார். இந்த நிலையில் இரவு கம்பி வேலிகளை உடைத்துக் கொண்டு விளைநிலத்துக்குள் புகுந்த யானைகள் சுமார் 200க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு, தென்னை மரங்களை சேதப்படுத்தி விட்டு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் குழாய்கள் மற்றும் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த டிராக்டரை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளது. இது குறித்து விவசாயி வனத்துறைக்கு தகவல் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்தியதை ஆய்வு செய்தனர். விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் பயிர்களை சேதப்படுத்தி சென்ற சம்பவம் விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும் போது, ஜோரேகாடு பகுதியில் தினமும் உலாவரும் யானைகளை கட்டுப்படுத்த ஜுரகள்ளி வனத்துறை யினர் இரவு ஜீரகள்ளி நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களை சுற்றி ஆழமான, அகலமான அகழிகள் ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனர்
Next Story




