தேங்காய் சுடும் குச்சி விற்பனை ஜோர்

தேங்காய் சுடும் குச்சி விற்பனை ஜோர்
X
ஆடி.1க்கு தேங்காய் சுடும் குச்சி விற்பனை குமாரபாளையத்தில் ஜோராக நடந்து வருகிறது.
ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அதற்கு ஏற்றார் போல மழைக்காலம் துவங்கி விட்டது. விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை டிராக்டர் கொண்டு உழத்தொடங்கியுள்ளனர். ஆடி. 1 மற்றும் ஆடி. 18 ஆகியவை மிக முக்கிய திருவிழாவாகும். காவிரி கரையோரம் உள்ள குமாரபாளையம் பகுதியில் இந்த இரு நாட்களிலும் காவிரி ஆற்றில், கன்னிமார் சுவாமிகளுக்கு படையலிட்டு, தொழில் சிறக்க வணங்கி, புதுமணத்தம்பதிகள் தங்கள் மாங்கல்ய கயிற்றினை மாற்றிக்கொள்வார்கள். ஆடி மாதம் என்றால் அம்மன் திருவிழாதான். அனைத்து அம்மன் கோவில்களில் திருவிழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆடி.1ல் தேங்காயில் ஒரு கண் துளையிட்டு, அதில் அரிசி, வெல்லம், உள்ளிட்ட பொருட்கள் போட்டு, தேங்காய் சுடும் குச்சி உதவியுடன் நெருப்பில் சிறுமியர் உள்பட கூட்டமாக, குடும்பம் குடும்பமாக சுடுவார்கள். அதனை படையலில் வைத்து இறைவனை வணங்கி, உள்ளே போட்ட பொருட்களை வெளியில் எடுத்து அனைவருக்கும் பங்கிட்டு தருவார்கள். இந்த தேங்காய் சுடும் குச்சி, குமாரபாளையம் மார்க்கெட் பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளது. ஜூலை. 17ல் ஆடி. 1, திருவிழா வருவதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த தேங்காய் சுடும் குச்சியை வாங்கி செல்கின்றனர்.
Next Story