டூவீலர் மோதி கூலித் தொழிலாளி பலி

டூவீலர் மோதி கூலித் தொழிலாளி பலி
X
குமாரபாளையத்தில் டூவீலர் மோதி கூலித் தொழிலாளி பலியானார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே ஆர்.சி. ரெட்டியூர் பகுதியில் வசிப்பவர் இருதயராஜ், 48. கூலி. இவர் நேற்றுமுன்தினம் மாலை 03:30 மணியளவில், குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் உள்ள, இவரது உறவினரை பார்த்துவிட்டு, திரும்ப ஊருக்கு செல்ல, சேலம் கோவை புறவழிச்சாலையை நடந்து கடந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கவாசகி டூவீலர் ஓட்டுனர், இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டார் என்று கூறினார். விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர், தர்மபுரியை சேர்ந்த கோகுல், 25, என்பவரும் பலத்த அடிபட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story