நடுமடையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவில் வேப்பநேரி கண்மாய் 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நீர் வளத்துறைக்கு சொந்தமான இந்த கண்மாய்க்கு புலிப்பட்டி கால்வாய் 1வது மடை வழியாக வரும் தண்ணீரால் நிரம்பும். இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெறும் வசதி உள்ளது. இக் கண்மாயிலிருந்து 3 மடைகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் வெளியேறும் நிலையில், நடுமடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நடுமடையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

