ஆன்லைன் விளையாட்டு விபரீதம். இரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் விளையாட்டு விபரீதம். இரயில் முன் பாய்ந்து தற்கொலை
X
மதுரை உசிலம்பட்டி அருகே ஆன்லைன் விளையாட்டில் அனைத்து இழந்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டியைச் சேர்ந்த சின்னராஜா (35) என்பவர் தனியார் டிரைவிங் பயிற்சி நிறுவன பயிற்சியாளராக இருந்தார். இவருக்கு ரூபாபதி என்ற மனைவி, 7 வயதில் ஒரு மகன், 5 வயதில் மகள் உள்ளனர். இவர் பலரிடம் கடன் வாங்கி ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டதால் வீட்டில் இருந்து வெளியேறினார். அவரது மனைவி உசிலம்பட்டி காவல் நிலையத்தில் தனது கணவரை 2 நாட்களாக காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 12ல் இரவு 7:00 மணிக்கு சில்லாம்பட்டி பகுதியில் போடிநாயக்கனுார் - மதுரை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story