பெண்ணிடம் நகையை பறித்தவர் கைது

பெண்ணிடம் நகையை பறித்தவர் கைது
X
மதுரை திருமங்கலம் அருகே வீட்டில் இருந்த பெண்ணிடம் நகையை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தங்களாசேரியை சேர்ந்த ராணுவ வீரர் கிருஷ்ணகுமாரின் மனைவி பாப்பா ஈஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது சவுடார்பட்டி இந்திரா காந்தியை சேர்ந்த முத்துப்பாலன் (36) என்பவர் பாப்பா ஈஸ்வரி வீட்டுக்கு வந்து உங்கள் கணவர் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வர சொன்னார் என்று கூற உடனே கணவரின் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் நான் வர சொல்லவில்லை என்று கூறியுள்ளார் .உடனே முத்துப்பாலனிடம் ெயிண்ட் அடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.அப்போது முத்து பாலன் குடிக்க தண்ணீர் கேட்க பாப்பா ஈஸ்வரி வீட்டுக்குள் தண்ணீர் எடுக்க சென்றபோது கதவை பூட்டி கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்கச் செயினை பறித்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து புகார் அளிக்கப்பட்டதில் நாகையாபுரம் போலீசார் முத்து பாலனை கைது செய்தனர்.
Next Story