விடுதியில் தற்கொலை செய்து கொண்ட பருப்பு வியாபாரி

X
Komarapalayam King 24x7 |14 July 2025 7:38 PM ISTகுமாரபாளையத்தில் பருப்பு வியாபாரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாத், 25. பருப்பு வியாபாரி. இவர் ஜூலை 12 இரவு 08:25 மணியளவில், பள்ளிபாளையம் பிரிவு அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 09:30 மணி வரை திறக்காமல் இருந்ததால், விடுதி நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் நேரில் வந்து, விடுதி அறையின் கதவை உடைத்து பார்த்த போது, விஸ்வநாத், இறந்து கிடந்தார். அங்கு பூச்சி கொல்லி மருந்து, மற்றும் இரண்டு மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இவரது சாவில் உள்ள மர்மத்தை அறிய பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இவரது சடலம் போலீசாரால் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
