கடவூர் ஒன்றிய செயற்குழு ஆலோசனை கூட்டம்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய ஆலோசனை கூட்டம் தரகம்பட்டி பசுபதிபாளையத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பசுவை பெரு.பாரதி, தூய்மை தொழிலாளர் அணி மாநில தலைவர் பாண்டியன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மாணங்களான 1. கடவூர் ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளில் உள்ள ஊர்களில் காலனி என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று கூறிய தமிழக அரசு வெளியிட்ட அரசானையை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும். 2. எதிர்வரும் ஒன்றிய செயலாளர்கள் கூட்டத்தில் கடவூர் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வது என்று தீர்மாணங்கள் நிறைவேறப்பட்டது. 3. கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கடவூர் வட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது. 4. கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மாத்தூர் கிராமம் பசுபதிபாளையம் பகுதியில் அருந்ததிர் மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் வீட்டிற்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று கடவூர் வட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது. 5. எதிர்வரும் ஆகத்து 17 தேதி தாந்தோணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏமூர் கிராமம் ஏமூர் புதூரில் அருந்ததியர் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவிற்கு வருகை தரும் சமூக நீதி காவலர் ஆதித்தமிழர்களின் தலை மகன் அய்யா அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும் ஆகத்து 20 இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க அணி வகுப்பிற்கு கட்சி தலைவர் தலைமையில் கடவூர் ஒன்றியம் முழுவதும் பெரும் திரளாக கலந்து கொள்வதாக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் பூபதி, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கடவூர் ஒன்றிய நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் (எ) செல்வா, செவலூர் முருகேசன், தளிவாசல் முருகேசன், விஜயலட்சுமி, மாமரத்துப்பட்டி முருகேசன், சாலிக்கரை ராஜா, தாமோதரன், சிவா, இன்பசிவம், தமிழன் பன்னீர்செல்வம் (எ) தங்கா தமிழரசன், முருகன், கோபி, பிரவீன்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
Next Story








