நியாய விலை கடை திறப்பு விழா - ஆட்சியர் பங்கேற்பு!

நியாய விலை கடை திறப்பு விழா - ஆட்சியர் பங்கேற்பு!
X
நியாய விலை கடையை ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 12.67 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கம்மவான்பேட்டை நியாய விலை கடையை, ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜூலை 14) திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story