தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

X
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம் வசந்தன் மற்றும் சாணார்பட்டி போலீசார் சாணார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரசின்னம்பட்டியில் உள்ள மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர் அதில் ஜெயலட்சுமி ரோஜா பேகம் உமர் தின் ஆகிய 3 பேரின் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர் மேலும் சாணார்பட்டி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
Next Story

