எதிரெதிரே வந்த டூவீலர்கள் மோதல். ஒருவர் பலி.

எதிரெதிரே வந்த டூவீலர்கள் மோதல். ஒருவர் பலி.
X
மதுரை திருமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பசும்பொன்நகரை சேர்ந்த நமகோடியின் மகன் விஜயகுமார்(31). கூலித்தொழிலாளியாவார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் (ஜூலை .13) மாலை திருமங்கலம் அருகேயுள்ள காங்கேயநத்தம் கிராமத்தில் வசிக்கும் தனது தங்கையை பார்க்க மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார். திருமங்கலம் – உசிலம்பட்டி ரோட்டில் பன்னிகுண்டு கிராமத்தின் அருகே சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனம் மீது மோதிய விபத்தில் விஜயகுமார் மற்றும் எதிரே வந்த அருப்புக்கோட்டை அருகேயுள்ள மல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்(36) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செல்லும் வழியிலேயே விஜயகுமார் உயிரிழந்தார். படுகாயமடைந்த செந்தில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story