பாஜகவின் கொள்கைகளை பேசும் முகமாக மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி

X
அரியலூர்,ஜூலை 15- பாஜகவின் கொள்கைகளை பேசும் முகமாக மாறிவிட்டார் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி என்றார் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர். அரியலூரிலுள்ள விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். பாஜக,பழனிசாமி தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டு, அதன் கொள்கைகளை பழனிசாமி பேசுகின்ற சூழக்கு கொண்டு விட்டது.இந்த சுமையினாலும், சரியான கூட்டணி அமையவில்லையே என்ற விரக்தியினாலும், முதல் நாள் பேசியதையே, மறுநாள் மறுத்துப் பேசுகிறார் பழனிசாமி. அடுத்த நாள் வேறொரு புதுக் கதையை, அவரே திரித்துப் பேசுகிறார். திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வலுவாக இருப்பதைப் பார்த்து எல்லோரையும் விமர்சனம் செய்யும் நிலைக்கு வந்து விட்டார்.ஆடு, மாடுகளுக்கு மாநாடு நடத்தும் அளவுக்கு சீமானின் நிலை இப்படி ஆகிவிட்டது என்பதை நினைக்கும்போதே, பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. அவர் மனிதனையே மனிதனாக நினைத்துப் பேச மாட்டார். வாய்க்கு வந்தபடி பேசுவார். அதன் உச்சமாக மதுரையில் ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.அவரது கடைசி கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது என்றார்.
Next Story

