துளார் மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

X
அரியலூர், ஜூலை 14: அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூர் அடுத்த துளார் கிராமத்திலுள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 12 ஆம் தேதி, புனித நீர் எடுத்துவரப்பட்டு, யாக சாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால வேள்விகள் நடத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை கடம் புறப்பாடும், அதனைத் தொடர்ந்து, கோயில் கலசங்கங்ளுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது. மருங்கூர், கொடுக்கூர், குறிச்சிகுளம் , தாமரைப்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story

