வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் 5.41 கோடி மதிப்பீட்டில் போதை மீட்டு மையம், கூடுதல் கட்டிடம் மற்றும் கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர கழக செயலாளர் நரேந்திரன், இளம் சிறார் நிதிமன்ற உறுப்பினர்கள் காருனியா தேவி ,தேவன்பு,நகர்மன்ற உறுப்பினர் சந்தோஷ் கண்ணன்,பொதுப்பணித்துறை அலுவலர்கள்,அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
Next Story



