கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவிப்பு

X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று முதல் துவங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (15ம் தேதி) முதல் நவம்பர் மாதம் வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவங்குகிறது. இதற்காக 1,288 தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் 8 முகாம்கள், திருக்கோவிலுாரில் 11, உளுந்துார்பேட்டையில் 10 முகாம்கள் நடக்கிறது. சின்னசேலம், மணலுார்பேட்டை, சங்கராபுரம், தியாகதுருகம், வடக்கனந்தல் ஆகிய பேரூராட்சிகளில் தலா 2 முகாம்கள் நடக்கிறது. மேலும் சின்னசேலம் வட்டாரத்தில் 13, கள்ளக்குறிச்சி 16, கல்வராயன்மலை 5, ரிஷிவந்தியம் 15, சங்கராபுரம் 15, திருநாவலுார் 12, தியாகதுருகம் 10, திருக்கோவிலுார் 15, உளுந்துார்பேட்டை 18, நீலமங்கலம் புறநகர் ஊராட்சி 2, பிடாகம் புறநகர் ஊராட்சி 2 முகாம்கள் என மொத்தம் 162 முகாம்கள் நடைபெற உள்ளது. நகர்ப்புற பகுதிக்கு 13 அரசு துறைகள் சார்ந்த 43 சேவைகள், ஊரக பகுதியில் 15 துறைகள் சார்ந்த 46 சேவைகள் வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சி வி.ஏ.எஸ்., திருமண மண்டபத்தில் இன்று நடக்கும் திட்ட துவக்க விழாவில் பொதுமக்கள் பங்கேற்று விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.
Next Story

