கல்லா பெட்டியை உடைத்து பணம் திருடியவர் கைது

கல்லா பெட்டியை உடைத்து பணம் திருடியவர் கைது
X
கைது
கள்ளக்குறிச்சி, கமலா நேரு தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜிலு, 52; இவர், கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட்டில் பூண்டு கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் காலை கடையை திறந்த போது, கல்லா பெட்டி உடைத்து அதில் இருந்த பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதே போன்று அருகே உள்ள பஷீர் என்பவரின் வெற்றிலைக்கடையிலும் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதி கேமராக்களை ஆய்வு செய்து, பணத்தை திருடிய கருணாபுரம் பழைய காலனியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ஆறுமுகம், 20; என்பவரை கைது செய்தனர்.
Next Story