வரகுண ராமபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

வரகுண ராமபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
X
பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை வரகுண ராமபுரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு பால். மஞ்சள். சந்தனம். குங்குமம் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு பல்வேறு அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடைபெற்றது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுரண்டை மற்றும் வரகுண ராமபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story