புற்று நோயாளிகளுக்கு நடிகை கௌதமி உதவி

X
குமரி மாவட்டம் குழித்துறை வாவுலி பொருள்காட்சியில் பைரவர் சேவா டிரஸ்ட் மற்றும் மார்த்தாண்டம் லிஸ்ட்டர் மருத்துவமனை இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பி, மார்த்தாண்ட லிஸ்ட்டர் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அரவிந்த் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நடிகை கௌதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு நிவாரண உதவி தொகை வழங்கினார். மேலும் மாவட்ட கிரிக்கெட் கிளப்பில் தேர்வு செய்யப்பட்ட மாணவன் சச்சின் தேவ் என்பவருக்கு கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கப்பட்டது.
Next Story

