வீட்டில் மருந்துகடை பெண் உரிமையாளர் பிணம்

X
குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மனைவி அனிதா (53) ஸ்டீபன் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். இவர்களது மகள் திருமணம் ஆகி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் அனிதா மட்டும் தங்கி இருந்தார். மேலும் இவர் ஆற்றூரில் மருந்து கடை நடத்தி வந்தார். தினமும் வாடகை ஆட்டோவில் மருந்து கடைக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 5 நாட்களாக மருந்து கடை திறக்கவில்லை. மேலும் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து அவரை அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர் கொச்சியில் உள்ள அனிதாவின் மகளுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து திருவட்டாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் உறவினர்கள் வீட்டில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் அவரது உடல் அழுகி துர் நாற்றம் வீசியது. அவர் இறந்து 5 நாட்கள் வரை ஆகி இருக்கலாம் என தெரிகிறது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

