காமராஜர் திருவுருவ சிலையை புதுப்பித்து பெரம்பலூர் மாவட்ட இளைஞர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறையின் மாநில இணை தலைவர் ஜான் அசோக் வரதராஜன் மற்றும் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் தங்க தமிழ்ச்செல்வன் பங்கு பெற்று காமராஜர் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் திருவுருவ சிலையை புதுப்பித்து பெரம்பலூர் மாவட்ட இளைஞர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறையின் மாநில இணை தலைவர் ஜான் அசோக் வரதராஜன் மற்றும் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்சிக்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரை.ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கனூர் தங்கவேல் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் இளைஞர் காங்கிரஸ் வேப்பந்தட்டை வட்டார தலைவர் சாரதி,அய்யலூர் வளவன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால்,OBC பிரிவு மாவட்ட தலைவர் சாமிதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன்,INTUC மாவட்ட தலைவர் அய்யாசாமி,கலை இலக்கியப் பிரிவு தன்ராஜ், வெங்கனூர் செல்வராஜ், மகிளா காங்கிரஸ் சந்திரா,தொண்டமாந்துறை பண்ணீன்,நெய் குப்பை சின்னசாமி,OBC பிரிவு சின்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story