வாங்கல்- கொலையில் முடிந்த மணல் கொள்ளை விவகாரம்.

வாங்கல்- கொலையில் முடிந்த மணல் கொள்ளை விவகாரம்.
வாங்கல்- கொலையில் முடிந்த மணல் கொள்ளை விவகாரம். கரூர் அடுத்த வாங்கல் ஈ வி ஆர் தெருவை சேர்ந்தவர் சங்கர் மனைவி ராணி வயது 50. இவர் காவிரி ஆற்று பகுதியை ஒட்டி உள்ள நிலத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு வெங்கமேடு சேர்ந்த வெங்கடேசன் 37, கவியரசன் 30 , விவேக் 27 , மணிகண்டன் 25 ஆகிய நான்கு பேர் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் ஈ வி ஆர் தெருவை சேர்ந்த மணிவாசகம் வயது 45 என்பவருக்கு சொந்தமான இடத்தில் மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் மணிவாசகம் அவரது தம்பி யோகேஸ்வரன் , உறவினர் ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசிடம் ஏன் எனது நிலத்தில் மணலை அள்ளுகிறாய் என கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் வெங்கடேசன் தரப்பினர் மணிவாசகம் யோகேஸ்வரன் ஆனந்த் ராணி அவரது தாய் ராசம்மாள் ஆகியோரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் மணிவாசகம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து எட்டு பேரை கைது செய்துள்ளனர். கொலையில் முடிந்த மணல் கொள்ளை விவகாரத்தால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story