தா பழூரில் சந்தா சேகரிப்பு தொடக்கம். தீக்கதிர் பதிப்பு மேலாளர் பங்கேற்பு.

தா பழூரில் சந்தா சேகரிப்பு தொடக்கம். தீக்கதிர் பதிப்பு மேலாளர் பங்கேற்பு.
X
தா.பழூரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் தொடங்கி பெறப்பட்ட சந்தாக்களை தீக்கதிர் பதிப்பு மேலாளரிடம் வழங்கப்பட்டது..
அரியலூர், ஜூலை.15- தமிழ் மாநில குழு முடிவு படி தமிழகம் முழுவதும் தீக்கதிர் வாசகர்களை அதிகப்படுத்தவும், அரசியல் பற்றி பாமர மக்கள் பலரும் அறிந்து கொள்ளும் வகையிலும்  தீக்கதிர் சந்தா சேர்க்கும் இயக்கம் தொடங்கப்பட்டு தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தீக்கதிர் சந்தாதாரர்களை அதிகப்படுத்தி அனைவரும் அரசியலை அறிந்து கொள்ளும் முகமாக மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் ஆலோசனையின் பேரில் தீவிரமாக சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் தொடங்கியது.இதில் சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்  டி.அம்பிகா, தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கட்சி கிளை செயலாளர்  கே.மருதகாசி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தீக்கதிர் சந்தா சேகரிப்பில் ஈடுபட்டனர்.அவ்வாறு பல்வேறு சந்தாதாரர்களிடமிருந்து பெறப்பட்ட சந்தாக்களை திருச்சி தீக்கதிர் பதிப்பு மேலாளர்  ஜெயபால் அவர்களிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் சந்தா சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அனைத்து இடைக்கமிட்டி நிர்வாகிகளுக்கு தமிழ் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இதேபோன்று அனைத்து இடைக்கமிட்டிகளிலும் சந்தா சேகரிப்பு இயக்கத்தை துவங்கி கூடுதலாக தீக்கதிர் சந்தாக்களை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் கேட்டு வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
Next Story