காமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு

காமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு
X
காமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை அறிவித்தனர்.
அரியலூர், ஜூலை 15- மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி, அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினர். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா தலைமையில் மதிமுக மாவட்டச் செயலர் ராமநாதன், ஒன்றியச் செயலர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் ôமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தலைமையில், மூத்த தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில மகளிர் அணி துணைத் தலைவி ரேணுகாதேவி உள்ளிட்டோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதே போல், ஜெயங்கொண்டம், திருமானூர், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள காமராஜர் சிலைக்கும், படத்துக்கும், காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story