உடையாமுத்தூர் ஊராட்சி கிராமத்திற்கு பல்வேறு அடிப்படை வசதி செய்து தரக்கோரி தேமுதிக சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

X
திருப்பத்தூர் மாவட்டம் உடையாமுத்தூர் ஊராட்சி கிராமத்திற்கு பல்வேறு அடிப்படை வசதி செய்து தரக்கோரி தேமுதிக சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திர்க்கு உட்டப்பட உடையாமுத்தூர் ஊராட்சி சமத்துவ புரம் கிராமத்தில் சுமார் முன்னுருக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்,இந்த கிராம பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர தேமுதிக சார்பில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி இடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர், இந்த உடையாமுத்தூர் சமத்துவபுரம் 15 ஆண்டு கால கோரிக்கையான உயர் மின் கோபுர விளக்கு அமைத்து தர வலியுறுத்தியும் மற்றும் சமத்துவபுரத்தில் உள்ள இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உடற் பயிற்சி செய்தவதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து அங்கு அதற்கான உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும் சின்னஉடையாத்தூர் அடுத்த படவட்டா வட்டம் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர், ஆகவே மேற்படி பகுதிக்கு தார் சாலையை அமைத்து தர வேண்டும் என்றும் மேற்படி சமத்துபுரம் கிராமம் மற்றும் சின்ன உடையாமுத்தூர் காலனியில் சுமார் 850 மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள இளைஞர்களின் அறிவுத்திறன் மேம்படுத்துவதற்கும், மாவட்ட செய்திகள் அறிவதற்கும், நல்ல கருத்துகளை அறிவதற்கு நூலகம் ஒன்று அமைத்து தர வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

