கர்மவீரர் காமராஜர் பிறந்த தின நிகழ்வு

கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 ஆம் ஆண்டு பிறந்த தின நிகழ்வு முன்னாள் மாணவர்கள் சங்கம் திருச்செங்கோடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைமையில் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. காமராஜர் பற்றிய கட்டுரை போட்டி கவிதை ஒப்புவித்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு முன்னால் மாணவர்கள் சங்கத் தலைவர் கோகுலநாதன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி ஆர் டி பரந்தாமன் துணைத் தலைவர் ராயல் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் செங்குட்டுவன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக காமராஜர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் பொன் கோவிந்தராஜ் மற்றும் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி, வழக்கறிஞர் சுரேஷ்பாபு, முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர் பரணிதரன்,ஆசிரியர் திருவருட்செல்வன் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பொருளாளர் பொறியாளர் நல்லகுமரன் அனைவருக்கும் நன்றி கூறினார்
Next Story

